திருச்சியில் முசுலீம் எதிர்ப்பு கலவரத்தைத் தூண்ட பாஜக முயற்சி !

நேற்று இரவு தங்களுடைய விளம்பரத் தட்டிகளை பாஜகவினரே கிழித்து விட்டு மகஇகவினரும் முசுலீம்களும் சேர்ந்து கிழித்து விட்டதாக பொய்க் குற்றம் சாட்டி ஒரு மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளனர். பத்திரிக்கை செய்தி நேற்று மாலை நரேந்திர மோடியின் வரவைக் கண்டித்து எமது அமைப்புகளின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள், குறிப்பாக முசுலீம்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் இக்கூட்டத்திற்கு திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர். மோடி வருவதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்ற சூழலில் மோடிக்கு எதிராக பல்லாயிரம் பேர் திரண்ட இந்தப் பொதுக்கூட்டம் பாஜகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று பொதுக்கூட்டம் நடக்கும் போதே ஆத்திரமூட்டி மோதலைத் தூண்டும் வகையில் வேனில் குறுக்கும் நெடுக்குமாக கோஷமிட்டபடி சென்றனர். ஆங்காங்கே நின்று மோதலை உருவாக்க முயன்றனர். இவற்றை எல்லாம் முறியடித்து அமைதியான முறையில் நேற்றைய கூட்டத்தை நடத்தி முடித்தோம். இதனை சகிக்க முடியாமல், தமது வளமையான பொய்ப் பிரச்சாரத்தையும் கலவரத்தைத் தூண்டும் முயற்சியையும், இன்று காலை பாஜகவினர் தொடங்கி விட்டனர். இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள முசுலீம்கள் அதிகம் வாழும் பகுதியில் சாலை மறியல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு தங்களுடைய விளம்பரத் தட்டிகளை பாஜகவினரே கிழித்து விட்டு மகஇகவினரும் முசுலீம்களும் சேர்ந்து கிழித்து விட்டதாக பொய்க் குற்றம் சாட்டி ஒரு மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளனர். முசுலீம்களுக்கு எதிரான தாக்குதலை நடத்துவதன் மூலம், அமைதியான சூழல் நிலவும் திருச்சியில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்கி மோடியின் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க முயற்சிக்கின்றனர். ஒரு அரசியல் கட்சித் தலைவரை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்துவதும், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதும் மிகவும் சாதாரணமான ஒரு ஜனநாயக உரிமை. ஆனால், தங்களை எதிர்த்து யாருமே பேசக் கூடாது என்ற அடிப்படையில் இந்த வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இது எமது அமைப்புத் தோழர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையிலான மோதல் என்று யாரும் புரிந்து கொள்ளக் கூடாது. அமைதியான தமிழகத்தை குஜராத்தைப் போன்ற ஒரு கலவர பூமியாக மாற்றும் முயற்சி இது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த மத சார்பற்ற, ஜனநாயக சக்திகள் இதனை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம். மதக்கலவரத்தை தூண்டும் குற்றத்துக்காக பாஜக தலைமையினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கோருகிறோம். மருதையன், மாநில பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: