டெல்லி: இந்தியா முலுவதும் கலவரத்தை தூண்டும் ஆர்எஸ்எஸ், சிவ சேனா ஆகியவற்றையும் தடை செய்ய வேண்டும் என முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியவை கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தக் கோரிக்கையை காங்கிரசும் ஆதரித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், மத்திய உள்துறை இணையமைச்சருமான ஷகீல் அகமத் கூறுகையில்,
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இதற்கு முன் 3 முறை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் எந்தத் தவறும் இல்லை.
நான் இதை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் தான் சொல்கிறேன். அமைச்சர் என்ற வகையில் அல்ல என்றார்.
முன்னதாக லாலு பிரசாத் யாதவும், முலாயம் சிங் யாதவும் ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்ய வேண்டும், கூடவே சிவ சேனாவையும் தடை செய்ய வேண்டும் என்றனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment