குஜராத்தை அடுத்து ஒரிஸ்ஸா

சிறுபான்மை இன மக்களான முஸ்லிம்களையும் கிருஸ்தவர்களையும் இனப்படுகொலை செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை சங்பரிவாரத்தினர் தங்களது குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.

படேல் தொட்டு இன்றைய பார்ப்பனன் போட்ட குஞ்சு வரை இவர்களின் நடவடிக்கைகளில் இது பிரதிபலிப்பதை நாம் காணலாம்.

முஸ்லிம்களை இந்தியாவை விட்டும் தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பாக்கிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட்டது. அப்போது போடப்பட்ட இந்து – முஸ்லிம் வெறுப்பு விதைகள் ஏராளம் ஏராளம்.

அப்பொழுதிலிருந்து இந்தியாவில் ஏதேனும் பிரட்சனை என்றால் பாக்கிஸ்தான் சதி என்றே சொல்லப்பட்டு வந்தது. குஜராத்தில் பிளேக் நோய் பரவி, அந்த மாநிலம் உலகை விட்டே தனிமைப்படுத்தப்பட்ட போது, இது பாக்கிஸ்தான் செய்த சதி என்று சொல்லப்பட்டது. - இது பாக்கிஸ்தான் சதி(?)யின் உச்சக்கட்டம்.

இப்படித்தான் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு ஊட்டப்பட்டது.

உண்மையில் சிறுபான்மையினராக உள்ள பார்ப்பணர்கள் பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களை ஆள்வதற்கு சங்பரிவாரத்தினர் போட்ட மற்றொரு துணை அஜண்டா தான், 'முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை ஊட்டி பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களின் ஒட்டுக்களை பெறுவது' என்பதாகும்.

ஒரிஸ்ஸாவில் 30.10.2008 ல் 13 இடங்களில் தொடர் வெடிகுண்டு வெடித்தது. முஸ்லிம்களோடு சம்பந்தமே இல்லாத இடத்தில் குண்டு வெடித்தாலும், 'இந்திய முஜாஹிதீன்' என்ற இல்லாத அமைப்பின் பேரில் ஈ-மெயில் வரும், அல்லது ஏதாவது ஒரு செய்திச் சேனலுக்கு தகவல் வரும். உடனே (சங்) பத்திரிக்கைகள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு தலைப்புச் செய்தியாக, எட்டுக் காலத்துக்கு செய்திகள் வெளியிடுவார்கள்.

உடனே அதிரடி போலீஸ் படையினர் தனது படைபட்டாளங்களோடு சென்று இஸ்லாத்தை சரியாக பின்பற்றக் கூடிய தாடி வைத்த, முஸ்லிம்களுக்கு பிரச்சாரம் செய்யும் நல்ல முஸ்லிம்களை பிடித்துக் கொண்டு சென்று சித்திரவதை செய்து சங்பரிவாரத்தினர்களை கொஞ்சம் சந்தோசப்படுத்துவார்கள்.

ஏன் நீங்கள் சங்பரிவாரத்தினர் மீது சந்தேகப்பட வில்லை என்று கேட்டால், ஈமெயில், செய்திச் சேனல் இவைகள் தான் காரணம், அதனால் தான் எங்கள் புலனாய்வு சங்பரிவாரத்தினர் மீது இருக்க வில்லை என்று சமாளிப்பார்கள்.

தேசத்தந்தை காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே என்ற பார்பணன் இஸ்மாயில் என்ற பெயரை தனது கையில் எழுதி வைத்திருந்தான். முஸ்லிம்கள் கொன்றொழிக்கப்பட வேண்டும் என்பதற்காக.

மாலேகான் குண்டு வெடிப்பின் போதும், குண்டு வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் பெண் சாத்விக்கு சொந்தமானதாக இருந்தாலும் அதன் இருக்கைகளில் முஸ்லிம்களுக்கான அடையாளம் இருந்ததாக கூறப்பட்டது, அதனால் சிமியின் மீதும் இந்திய முஜாஹிதீன்கள்(?) மீதும் சந்தேகம் என்றார்கள். முஸ்லிம்கள் வழக்கம் போல கைது செய்யப்பட்டார்கள். சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

இறுதியில் விஷ்வ ஹிந்து பரிசத் என்ற தீவிரவாத அமைப்பு நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதும் பெண் சாமியாரும், முன்னால் இந்திய ராணுவ வீரர்கள் என்ற தேசதுரோகிகளும் மற்றைய சங்பரிவார் கும்பலும் அந்த வெடிகுண்டு சம்பவத்தில் சம்பந்தம் இருப்பதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதைப் போன்றே தமிழகத்தின் தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்தது. முஸ்லிம்கள் மீது சந்தேகம் எழுந்தது. குண்டு வைத்ததோ சங்பரிவாரத்தினர் தான் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. முஸ்லிம்கள் மீது பழிபோட வேண்டும் என்பதற்காகவே இதை செய்ததாக குற்றவாளிகள் ஒப்புக் கொண்டார்கள்.

கோவையில் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட போதும், முஸ்லிம்கள் மீது பழிபோடப்பட்டு 19 முஸ்லிம்கள் கொல்லபட்டனர். பல கோடி மதிப்புள்ள முஸ்லிம்களின் சொத்துக்கள் சங்பரிவார கும்பல்களினாலும் போலீஸ் குண்டர்களினாலும் சூறையாடப்பட்டது. சங் கூட்டத்தினரின் முக்கிய நோக்கம் இது தானே.

ஹைதராபாத் ஜும்ஆ பள்ளி வாசலில் குண்டு வெடித்தது. முஸ்லிம்கள் தான் கைது செய்யப்பட்டார்கள்.

தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் சங்பரிவார் கும்பல்கள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் கலவரம் உண்டாக்குவார்கள். முஸ்லிம்களே கைது செய்யப்பட்டார்கள்.

பாபர் மசூதி இடிக்கபட்டது. அதைத் தொடர்ந்து 3,000 முஸ்லிம்கள் மும்பை தாதா பால்தாக்கரே கும்பலால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.

குஜராத்தில் சபர்மதி எஸ்க்பிரஸ் ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. முஸ்லிம்கள் மீது பழிபோடப்பட்டு, 3,000 முஸ்லிம்கள் மோடியின் தயவால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.

அஸ்ஸாமில் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதி என்பவர் மாவோயிஸ்ட்டுகளால் கொலை செய்யப்பட்டார். வேண்டுமென்றே பழியை கிருஸ்தவர்கள் மேல் போட்டு, ஒரு கிருஸ்தவ சந்நியாசிப் பெண்ணை சங்பரிவார் கும்பல் மாறி மாறி கற்பழித்தார்கள். இந்தக் கொடுமை போலீஸ் அதிகாரியின் முன்னிலையிலேயே நடந்துள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட கிருஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். பல ஆயிரம் பேர் தங்களது வீடுகளை இழந்தார்கள்.

இதுதானே சங்பரிவாரத்தினரின் முக்கியமான நோக்கம்.

இந்தியப் போலீஸுக்கும் உளவுத்துறைக்கும் நாம் சொல்லிக் கொள்வதெல்லாம்,

சங்பரிவாரங்களுக்கு துணை போகக்கூடிய போலீஸாரும் உளவுத்துறையினரும் வெகுவிரைவில் அந்தந்த துறையிலிருந்து களையெடுக்கப்படுவார்கள்.

இந்திய அரசியல் சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல்படும் தேசதுரோகிகளான சங்பரிவாரக் கும்பல்களின் துரோக செயல்கள் அம்பலப்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: