
இலங்கை சிங்கள பேரினவாத அரசிடமிருந்து தமிழ்மக்களுக்காக தனிராச்சியம் பெற்றுத்தரப்போகிறோம் என்று கிளம்பிய விடுதலைப்புலிகள், தன்னுடைய கொள்கைக்கு மாற்றமாக தமீழத்திற்காக போராடிய சக போராளிகளை கொன்றது, தமிழ்பேசும் முஸ்லிம்களை மூதூரில் கொன்றது அவர்களை அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றியது இப்படியான பயங்கரவாத செயல்களை செய்துவந்ததை நாமறிவோம்.
இந்நிலையில் இலங்கையில் சமீபத்தில் புலிகளுக்கு எதிராக இலங்கைஅரசு உச்சக்கட்ட தாக்குதல் தொடுத்துவருகிறது. இதில் புலிகளுக்கு இறுதியுரை எழுதும்நாள் நெருங்கும் நிலையில், போரினால் அப்பாவிகள் கொல்லப்படுவதை தடுக்கவேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் இலங்கை அரசை வலியுறுத்தியதையடுத்து இருநாட்கள் போர்நிறுத்தம் செய்து அப்பாவிகள் புலிகள் பகுதியிலிருந்து வெளியேறி ராணுவத்தின் பாதுகாப்பு பகுதிக்கு வரவேண்டும் என்று இலங்கை அரசு அறிவித்தது.
தமிழர்கள் மீது உண்மையில் புலிகளுக்கு அக்கறையிருக்குமெனில், அப்பாவிகள் வெளியேறுவதற்கு ஒத்துழைப்பு தந்திருக்கவேண்டும். ஆனால் சுமார் இரண்டரை லட்சம் மக்களில் சில ஆயிரம்பேர் மட்டுமே பாதுகாப்பு பகுதிக்கு வந்துள்ளனர். மேலும் உயிர்பிழைக்கும் எண்ணத்துடன் பாதுகாப்பு பகுதிக்கு வந்த அப்பாவி தமிழர்களையும் பரலோக ராஜ்ஜியத்திற்கு அனுப்ப முடிவு செய்து அகதிகளோடு அகதியாக ஒரு பெண் தற்கொலைதாரியை அனுப்பிவைத்துள்ளது புலிகள் அமைப்பு.
நேற்று விசுவமேடு பகுதியில் உள்ள பாதுகாப்பு பகுதிக்கு எண்ணூறு அப்பாவித்தமிழர்கள் வருகைதந்துள்ளனர். அவர்களை ராணுவஅதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தபோது, ஒரு பெண் தற்கொலைதாரி குண்டை வெடிக்கச்செய்ததில் இருபது ரானுவவீர்கள், எட்டு அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். தொண்ணூறு பேர் காயமடைந்துள்ளனர்.இந்த செய்தி இலங்கைராணுவ செய்திதொடர்பாளர் உதய நாணயக்காரா அவர்கள் கூறியதாக பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது.
இதிலிருந்து புலிகளின் நோக்கம் தமிழர்களை காப்பதல்ல. புலிகளின் சர்வாதிகார சாம்ராஜ்யத்தை உருவாக்குவதுதான் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கமே தமிழர்களின் ஏகபோக இயக்கம் என்று கூவிவரும், நெடுமாறன், வைகோ, திருமா, வீரமணி, ராமதாஸ் ஆகிய தமிழின தலைவர்கள்[?] இந்த படுகொலை நிகழ்வுக்கு என்ன பதிலளிக்கப்போகிறார்கள்?
0 comments:
Post a Comment