
அதிகாரம் மக்களுக்கே' என்ற கோஷத்தை ஏற்ற பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா
(பி.எப்.ஐ.,) அமைப்பின் தேசிய அரசியல் மாநாடு கேரள மாநிலம் கோழிக்கோட்டில்
நடந்தது.கடந்த 13ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை மூன்று நாட்கள் நடந்த இந்த
மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, டில்லி
உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து பி.எப்.ஐ., உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முதல்
நாளான 13ம் தேதி நடந்த தேசிய மாணவர்கள் கருத்தரங்கத்தில் தமிழகம்,
கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து
கொண்டனர். அதே நேரத்தில் மற்றொரு இடத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்
சகோதரத்துவக் கூட்டம் நடந்தது.இதில், பி.எப்.ஐ., தலைவர் அப்துல் ரகுமான்,
தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த அமைப்பின் தலைவர்கள்,
ஐக்கிய அரபு எமிரேட், கத்தார், பக்ரைன், ஓமன், குவைத் உள்ளிட்ட நாடுகளில்
வாழும் இந்தியர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.

அன்று
மாலையில் சயீத் திப்பு சுல்தான் நகரில் அரசியல் அதிகாரமளித்தலும் - மாற்று
வகைகளும் என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் நடந்தது. பாப்புலர் பிரன்ட்
பொதுச் செயலர் ஷரீப் தலைமையில் நடந்த இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற
கழக தலைவர் ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அடுத்த நாள்
காலையில் மனித உரிமைகள் ஆதரவாளர்கள் கூட்டம் நடந்தது. அதே நேரத்தில்,
ஓட்டல் ஸ்பேனில் அரசியல் ஆர்வலர்களின் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு
பி.எப்.ஐ.,யின் முன்னாள் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார்.தமிழகம், கேரளா
உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள அரசியல் சார்ந்த முஸ்லிம் அமைப்பினர் பங்கு
பெற்றனர். அன்று மாலை 3 மணிக்கு சயீத் பகத் சிங் நகரில்,
பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கத்தை,
மகசேசே விருது பெற்ற சந்தீப் பாண்டே துவக்கிவைத்தார்.இதில், கான்பூரைச்
சேர்ந்த சுவாமி லட்சுமி சங்கராச்சார்யா, சுப்ரீம் கோர்ட் நீதிபதி
பிரசாந்த் பூஷன், சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் அருணன் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.

இறுதி நாளான
நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு ஓட்டல் ஸ்பேனில் தேசிய இட ஒதுக்கீடு
குழுவின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தை கேரள பாப்புலர் பிரன்ட் தலைவர்
நசிருதீன் துவக்கிவைத்தார். இக்கூட்டத்தில் பல்வேறு சிறுபான்மை
அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இடஒதுக்கீடு குறித்து
விவாதித்தனர்.அதே வேளையில் ஓட்டலின் மற்றொரு பகுதியில் தேசிய
ஊடகவியலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேஜஸ் டெய்லியின் ஆசிரியர்
கோயா தலைமை வகித்தார். கூட்டத்தை சுப்ரீம் கோர்ட் வக்கீல் பிரசாந்த் பூஷன்
துவக்கிவைத்தார்.

மற்றொரு
இடத்தில், தேசிய உலமாக்கள் கருத்தரங்கம், "அதிகாரமளித்தலில் மதம்' என்ற
தலைப்பில் நடந்தது. தேசிய பெண்கள் கருத்தரங்கம் கோழிக்கோடு கடற்கரை
அருகில் நடந்தது. "அரசியல் அதிகாரத்தில் பெண்கள்' என்ற கருத்தை மையமாக
கொண்டு நடந்த இக்கருத்தரங்கை ராஜஸ்தான் பி.யு.சி.எல்., அமைப்பின் தலைவர்
கவிதா ஸ்ரீ வத்சவா துவக்கிவைத்தார். இக்கருத்தரங்கில் தமிழகம் சார்பில்
ஜமியத்துன்னிசா அமைப்பின் பொருளாளர் சித்தி அலியார் கலந்து கொண்டார்.

கடந்த
15ம் தேதி மாலை 3 மணிக்கு பி.எப்.ஐ., அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும்
இளைஞர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட அணிவகுப்பு பேரணி நடந்தது. இப்பேரணியில்
லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.கோழிக்கோடு ராஜாஜி சாலையில் உள்ள
ஸ்டேடியத்தில் இருந்து பி.எப்.ஐ., தலைவர் அப்துல் ரகுமான் தலைமையில்
புறப்பட்ட இப்பேரணி மூன்று கி.மீ., தூரம் பயணித்து கோழிக்கோடு கடற்கரையில்
உள்ள திடலை அடைந்தது.அங்கு, இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தை தென்னாப்ரிக்க அதிபரின் சிறப்பு ஆலோசகர் இப்ராகிம் ரசூல்
துவக்கி வைத்தார்.

இதில், தமிழக
பி.எப்.ஐ., தலைவர் முகமது அலி ஜின்னா மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த
தலைவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஆண்கள், பெண்கள் என இரண்டு
லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோழிக்கோடு கடற்கரையே
மனித கடலில் மூழ்கிப் போயிருந்ததை காண முடிந்தது.
0 comments:
Post a Comment