
இந்தியாவில் இருப்பவர்கள் உண்மையிலேயே மன நோயாளிகளாக ஆகிவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் அவர்கள் தான் தம்மைச் சுற்றி எது நடந்தாலும் உணராதவர்களாக இருப்பார்கள்.
இப்போது தினசரி செய்தித்தாள்களில் வரும் முன்னுக்கு பின்னான செய்திகளை படிக்கும் போது நமக்கு கேவலமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது.
இந்தியர்களின் துணிச்சல் இவ்வளவு தானா? என்ன நடக்கிறது இந்த நாட்டில் என்று கேட்க துப்பில்லாதவர்களாகவும்,கைய்யாலாகாதவர்களாகவும்,
முதுகெலும்பு இல்லாதவர்களாகவும் ஆகி விட்டார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.
கடந்த ஒரு மாத காலத்தில் செய்தித்தாள்களில் வந்த சில செய்திகளின் சாராம்சம் இது. அதை படிக்கும்போது இந்த அரசு நாட்டு மக்களை எந்தளவுக்கு முட்டாளாக நினைக்கிறது என்ற உண்மை புலப்படும்.
ஒரு பக்கத்தில் இந்தியாவின் அறுபதாவது சுந்ததிரதின விழா கொண்டாட்டம் என்ற செய்தி
அதே பக்கத்தின் இன்னொரு மூலையில் சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர், ஐந்தடுக்கு பாதுகாப்பு என்ற செய்தி.
ஒரு பக்கத்தில் வலது ஓரத்தில் ஷாருக்கான் அமெரிக்காவில் அவமானப்படுத்தப் பட்டார் என்ற செய்தி,
இன்னொரு பக்கத்தில் இடது ஓரத்தில் கீழே இந்தியாவில் அறுபதாவது சுதந்திரதினத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து என்ற செய்தி.
ஒரு பக்கத்தில் மத்திய அரசு விலைவாசியை குறைப்பது பற்றி கூடி விவாதித்தது என்ற செய்தி
அதே பக்கத்தில் இன்னொரு ஓரத்தில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பாலின் விலை உயரும் என்ற தமிழக அரசின் செய்தி.
ஒரு பக்கத்தில் ஈழத்தமிழர்களின் விவகாரத்தில் இன்னும் விரைவான நடவடிக்கை தேவை இந்தியா வலியுறுத்தல் என்ற செய்தி
அதே பக்கத்தில் போரில் இலங்கைக்கு இந்தியா எப்படி உதவியது என்ற செய்தி
ஒரு பக்கத்தில் ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற செய்தி,
மற்றொரு பக்கத்தில் இந்தியா கேட்கும் வங்கி கனாக்கு விபரங்களை தர முடியாது என்று ஸ்விஸ் வங்கி கூட்டமைப்பின் சார்பில் திமிரான பதில் செய்தி
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒரு காலத்தில் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி நடந்தது.ஆனால்
இப்போது அதே பெயரில் மக்களை முட்டாளாக்கி,அவர்களை ஏன் என்ற கேள்வியே கேட்டு விடாமல் இருக்க பல இலவசங்களை அறிவித்து என்ன செய்தாலும் உணர்ந்து கொள்ள முடியாமல் இருக்க அவர்களை இலவசங்களுக்கு அடிமையாக்கி, மன நோயாளிகளாக மாற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் அரசுகள்,
மக்கள் இதை எப்போது உணர்ந்து கொள்வார்கள்.
0 comments:
Post a Comment