ஷார்ஜாவில் விமானம் வெடித்து தீப்பிடித்து எரிந்தது

ஷார்ஜாவில் சூடான் நாட்டு விமானம் வெடித்து தீப்பிடித்து எரிந்தது!

ஷார்ஜா: ஷார்ஜா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த ஆறு பேர் பரிதாபமாக இறந்தனர்.

சூடான் நாட்டிற்கு சொந்தமான அஜ்ஜ ஏர் என்ற நிறுவனத்துடமிருந்து சூடான் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம்குத்தகைக்கு எடுத்து இயக்கும் போயிங் 707-302 வகையை சேர்ந்த விமானம் ஷார்ஜா விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது வலது பக்கமாக சாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் அதிலிருந்த சூடான் நாட்டை சேர்ந்த ஆறு பேரும் உயிரிழந்தனர் என்று துபையில் சூடான் நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஷார்ஜா விமானநிலைய ஓடுபாதை மூடப்பட்டது. இறந்தவர்களில் கேப்டன் முகமதுஅலி மற்றும் பொறியாளர் முகமது அல் ஃபத்தி ஆகிய இருவரும் அடங்குவர் என்று ஷார்ஜா அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து குறித்த செய்தி மதியம் 3:30 மணி அளவில் கிடைத்ததாகவும் பிறகு இரண்டு மணி நேரத்தில் தீ அணைக்கப் பட்டுவிட்டதாகவும் அஜ்மான் சிவில் டிஃபென்சும் இதற்கு உதவியதாக உள் துறை பாதுகாப்பு நிர்வாக இயக்குனர் வாஹித் அல் செர்கல் கூறினார்.

மேலும் இது குறித்து ஷார்ஜா சிவில் விமான போக்குவரத்து இயக்குனர் காலித் அல் காஸிமி கூறும்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதாகவும் விசாரணக்காக எல்லா தடயங்களும் சேகரிக்கப்படுகின்றன என்றார்.

இவ்விமான விபத்தை நேரில் கண்ட சாட்சியங்களான சிலர் கூறியதாவது: ஆர்டம் பிலிப்போவ் என்பவர் கூறும்போது பயங்கரமான வெடி சத்தம் கேட்டது வெளியில் போய் பார்த்தபோது தீ ஜுவாலைகளுடன் நெருப்பு கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது என்றார். நாகேஷ் வல்லபன் என்ற விமானநிலைய ஊழியர் கூறும்போது சமனில்லாத நிலையில் ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் சென்ற விமானம் சற்று நேரத்தில் வலது பக்கம் சாய்ந்து விழுந்து வெடித்து தீப்பிடித்தது அதிலிருந்த ஒருவர் கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றார்.

1960 மற்றும் 1970 களில் ஆயிரத்திற்கும் மேலாக தயாரிக்கப்பட்ட போயிங் 707 விமானங்கள் தற்போது சுமார் 60க்கும் குறைவான விமானங்களே பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: