இந்தியா-ரஷியா இடையே மீண்டும் ரூபாய்-ரூபிள் வர்த்தகம்
மாஸ்கோ:
இந்தியாவுக்கும்-ரஷியாவுக்கும் இடையே முன்பு போலவே இந்திய நாணயமான ரூபாய், ரஷிய நாணயமான ரூபிளை பயன்படுத்து இரு தரப்பு வர்த்தகத்தை மேற்கொள்ள உள்ளன.
சோவியத் ஒன்றியத்தில் உள்ள நாடுகள் தனித்தனியாக பிரியும் வரை இந்தியாவுக்கும்-ரஷியாவுக்கும் (சோவியத் யூனியன்) இடையே ஏற்றுமதி-இறக்குமதி வரித்தகம் ரூபாய்- ரூபிள் அடிப்படையில் நடைபெற்றது. இரு நாடுகளின் சொந்த நாணயத்தில் வர்த்தகம் நடைபெற்றதால் சோவியத் யூனியனுடன் அதிக அளவு வர்த்தகம் செய்யும் நாடாக இந்தியா இருந்தது. 1991 ஆம் ஆண்டில் இது தரப்பு வர்த்தகம் 5 பில்லியன் டாலர் அளவிற்கு இருந்தது.
சோவியத் யூனியன் பிரிந்த பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் டாலரில் நடைபெறுகிறது. இதை மாற்றி, மீண்டும் பழைய முறையிலேயே வர்த்தகத்தை தொடங்குதற்கு இந்திய ரிசர்வ் வங்கியும், ரஷியாவின் ரிசர்வ் வங்கியான, பாங்க் ஆப் ரஷியாவும் ஆலோசனை நடத்தி வருகின்றன.
இது தொடர்பான பேச்சுவார்த்தை இரு வங்கிகளுக்கும் இடையே, இந்த மாத தொடக்கத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற வங்கி-நிதி தொடர்பான 15 வது ஆலோடசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இது குறித்து பாங்க் ஆப் ரஷியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இரு நாட்டு மத்திய வங்கிகளும், அவைகளின் சொந்த நாணயத்தில் வர்த்தகத்தை நடத்த ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளன என்று கூறியுள்ளது.
சர்வதேச அந்நிய செலவாணி சந்தையில் டாலரின் மதிப்பு அதிக அளவு மாறுவதாலும், அமெரிக்க பொருளாதாரம் நெருக்கடியில் இருப்பதால் பல நாடுகள் அந்நிய செலவாணி இருப்பாக டாலரை விட மற்ற நாணயங்களை வைத்துக் கொள்வதில் ஆர்வம் காண்பித்து வருகின்றன. அத்துடன் சர்வதேச நாணயமாக டாலருக்கு பதிலாக புதிய நாணயத்தையும் அறிமுகப்படுத்தும் ஆலோசனையும் பல்வேறு மட்டங்களில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment