முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அமுல்படுத்தக்கோரி தேசிய அளவிலான பிரச்சார இயக்கத்தை துவக்குகிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
புதுடெல்லி:இன்ஷா அல்லாஹ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகிற 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அமுல்படுத்தக்கோரி தேசிய அளவிலான பிரச்சார இயக்கத்தை துவக்கவிருக்கிறது.
இதனையொட்டி மிகப்பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஒன்று வருகிற ஜனவரி 31 ஆம் தேதி மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் நடைபெறவிருக்கிறது.பிரச்சார இயக்கத்தின் முடிவில் பாராளுமன்றத்தை நோக்கிய அணிவகுப்பும் நடைபெறும்.
பிரச்சார இயக்கம் தொடர்பான தொடர் நிகழ்ச்சிகள் கையேடுகள், சுவரொட்டிகள், கண்காட்சிகள், கருத்தரங்குகள்,பேரணிகள், தெருமுனைப் பிரச்சாரக்கூட்டங்கள், வாகனப் பிரச்சாரங்கள் மற்றும் கலாச்சாரக் கண்காட்சிகள் மூலம் நடத்தப்படும்.
இந்தமுடிவு சமீபத்தில் கோழிக்கோட்டில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியப்பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் தெரிவித்தார். ரங்கநாத் மிஸ்ரா கமிசன் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை வழங்கிடவேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சமீபத்தில் நடந்துமுடிந்த பாராளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடரில் ரங்கநாத் மிஸ்ரா கமிசன் அறிக்கை தாக்கல்ச் செய்யப்பட்டபோதும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதற்கான எந்தவித நடவடிக்கையும் அறிவிக்கவில்லை. ரங்கநாத் மிஸ்ரா கமிசன் அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்த அனைத்து சிறுபான்மை மற்றும் பிற்பட்டோர் அமைப்புகள் ஒன்றிணைய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
ரங்கநாத் மிஸ்ரா கமிசன் பரிந்துரைகளில் சிறுபான்மையினர் முன்பு தலித் அல்லது பழங்குடியினராகயிருந்து அவர்கள் அனுபவித்து வரும் இடஒதுக்கீடு சலுகைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது எனக்கூறியுள்ளது.
மத,உயர் ஜாதி, அதிகார வர்க்கங்கள் உரிமைப்பறிக்கப்பட்ட மக்களை பிரிக்கச்செய்யும் முயற்சிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எச்சரித்துள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயற்குழு தேசிய புலனாய்வுக்கமிசனின்(N.I.A) செயற்பாடுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. இதுத்தொடர்பாக ஷெரீஃப் கூறுகையில், "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயற்குழு சமீபத்தில் உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வுக் குழுவின் செயற்பாடுகளை உற்றுநோக்கியே வருகிறது.தேசிய புலனாய்வுக்குழுவின் செயற்பாடுகள் கூட்டாட்சி தத்துவம் மாநிலங்களுக்கு வழங்கியிருக்கும் சுயாட்சி மற்றும் காவல்துறை, நிர்வாக சுதந்திரத்திற்கு எதிராகவே உள்ளது."
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்கனவே தடைச்செய்யப்பட்ட நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை வாபஸ் பெறக்கோரியுள்ளது. மேலும் ஏற்கனவே வேறு அரசு ஏஜன்சிகள் விசாரித்துவந்த வழக்குகளை தேசிய புலனாய்வுக் குழுவிற்கு மாற்றும் அரசின் முடிவை எதிர்த்துள்ளது.தடைச்செய்யப்பட்ட நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் ஏற்கனவே ரத்துச்செய்யப்பட்ட தடா, பொடா சட்டங்களை மீண்டும் கொண்டுவருவதற்கு சமம். மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயற்குழு அத்தியாவசியப்பொருட்களின் வரையறையற்ற விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவியலாத மத்திய மாநில அரசுகளை குறை கூறியது.பொதுவிநியோக முறையை வலுப்படுத்த வேண்டுமென்றும் ரேசன் கார்டு உடையவர்களுக்கு அத்தியாவசியப்பொருட்களை ரேசன் கடைகள் மூலம் வழங்கவேண்டும் மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக அத்தியாவசிய பொருட்களை வழங்கவேண்டுமென்றும் அரசை கோரியுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயற்குழு கூட்டத்திற்கு தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமைவகித்தார்.பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.இக்கூட்டத்தில் எ.சயீத், ஒ.எம்.அப்துஸ்ஸலாம், டாக்டர் மெஹ்பூப் ஷெரிஃப் அவாத்,வழக்கறிஞர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப், பேராசிரியர் பி.கோயா, ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி, மெளலான உஸ்மான் பேக் ரஷாதி, எம்.முஹம்மது இஸ்மாயில் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
source:twocircles
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment