
தலைநகர் தாய்பெயில் கட்டிடங்கள் குலுங்கின. சுமார் 250 மைல் சுற்றளவுக்கு நில அதிர்வின் தாக்கம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தலைநகர் தாய்பெயில் இயக்கப்பட்டு வரும் அதிவேக ரயில் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது. நகர் முழுதும் மின்னிணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
6.1 ரிக்டர் அளவில் பதிவான இப்புவியதிர்வைத் தொடர்ந்து சேத விபரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. கவோஸ்யூங் நகர அதிகாரிகளின் தகவலின்படி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்,பாதிக்கப்பட்டவர்களைத் தங்கவைக்க சில தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைவானில் கடந்த 1999 ஏற்பட்ட 7.6 அளவிலான நிலநடுக்கத்திற்கு சுமார் 2,300 பேர் பலியாயினர். பின்னர் 2006 இல் 6.7 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தில் கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள கேபிள் இணைப்புகள் பாதிக்கப்பட்டு தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இன்றைய புவியதிர்வைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
0 comments:
Post a Comment