துபாய் ஹோட்டலில் கடந்த ஜனவரி 20ஆம் தேதிக் ஹமாஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான மப்ஹூஹ் அல் மஹ்மூது அவர்கள் கொலை செய்யப்பட்டது உலகெங்கும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
இதுகுறித்து துபாய் காவல்த்துறை தலைவர் தாஹி கல்ஃபான் தமீமி கூறுகையில் இந்த கொலைக்கு முழு காரணம் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் என்பதர்க்கு பல ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும், மேலும் இது குறித்து தீவிரவிசாரனை நடைப்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில் குற்றவாளிகளின் டி.என்.ஏவும் கைரேகைகளும் சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அவர்களிடம் உள்ள குற்றவாளிகளுடைய டி.என்.ஏ மற்றும் கைரேகையை ஒப்பிட்டு பார்ப்பதற்கான பரிசோதனைக்கு தயாராக வேண்டும் என்றார்.
மொஸாதுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இஸ்ரேல் நிரூபித்தால் நான் எனது வேலையை ராஜினாமா செய்ய தயார் என துபாய் காவல்துறை தலைவர் இஸ்ரேலிடம் சவால் விடுத்துள்ளார்.
கொலையில் மொஸாதின் பங்கு பற்றிய குற்றச்சாட்டிற்கு இஸ்ரேல் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment