எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை

காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தை ஏறி இந்தியாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அர்ஜூன் வாஜ்பாய் புதிய சாதனை படைத்துள்ளான்.

மிகவும் குறைந்த வயதில் எவரெஸ்ட் ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமையும் வாஜ்பாய்க்குக் கிடைத்துள்ளது.



டெல்லி ரியான் சர்வதேசப் பள்ளியில் படித்து வருகிறான் வாஜ்பாய். நேற்று எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு மிகவும் குறைந்த வயதில் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றான் வாஜ்பாய்.

அடுத்த மாதம் வாஜ்பாய்க்கு 17 வயது பிறக்கிறது. 8848 மீட்டர் உயரத்தை அடைந்ததும் வாஜ்பாய் இந்திய தேசியக் கொடியை நட்டு, சாதனை படைத்தான்.

நேற்று காலை 6.18 மணியளவில் இந்த சாதனையைப் படைத்தான் வாஜ்பாய். எவரெஸ்ட்டில் ஏறியபோது தான் எந்த சிரமத்தையும் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளான் வாஜ்பாய்.

அமெரிக்க சிறுவன் உலக சாதனை

இதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஜோர்டான் ரொமேரோ புதிய சாதனை படைத்துள்ளான். மிகவும் இளம் வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறியது ஜோர்டான்தான்.

சனிக்கிழமையை இந்த சாதனையைப் படைத்தான் ஜோர்டான். உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரத்தை ஏறுவதை ஒரு சாதனைப் பயணமாக வைத்துள்ளான் ஜோர்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஜோர்டானின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சாட்டிலைட் போன் மூலம் ஜோர்டான் இடம் பெற்றிருந்த குழுவினர் எனக்குத் தகவல் கொடுத்தனர். கடல் மட்டத்திலிருந்து 29,035 அடி உயரத்தில் இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு விட்டதாக அவர்கள் கூறினர்.

அவர்களது கனவு நனவாகியுள்ளது. அனைவருக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சி என்றார்.

10 வயதாக இருக்கும்போது ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரமான கிளிமஞ்சாரோவில் ஏறி சாதனை படைத்தவன் ஜோர்டான்.

இதற்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தில் மிகவும் குறைந்த வயதில் ஏறி சாதனை படைத்தவர் நேபாளத்தைச் சேர்ந்த தெம்பா ஷேரி என்ற 16 வயது சிறுவன். அந்த சாதனையை தற்போது ஜோர்டான் முறியடித்துள்ளார்.

ஜோர்டான் படைத்த இந்த சாதனையை அவரது தாயார் ஆன்லைன் மூலமாக நேரடியாக கண்டு பரவசம் அடைந்தார்.

தனது தந்தை, தந்தையின் தோழி, 3 நேபாள நாட்டு ஷெர்பா கைடுகள் ஆகியோருடன் எவரெஸ்ட்டைத் தொட்டார் ஜோர்டான்.

சீனப் பகுதியிலிருந்து எவரெஸ்ட் ஏறும் முயற்சியைத் தொடங்கினார் ஜோர்டான்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: