மக்கள் சென்ற பஸ்ஸைத் தாக்கிய மாவோயிஸ்ட் நக்சலைட்கள்- 50 பேர் பரிதாப சாவு

தாண்டேவாடா: சட்டிஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில், பொதுமக்கள் சென்ற பஸ்சை மாவோயிஸ்ட் நக்சலைட்கள் கண்ணிவெடி வைத்துத் தகர்த்தனர். இதில் குறைந்தது 50 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சுக்மா சாலை என்ற இடத்தில் இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பேருந்தில், 15 சிஆர்பிஎப் வீரர்கள் பயணித்தனர். மற்ற அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என்று தெரிய வந்துள்ளது.

முன்னதாக இந்தப் பேருந்தில் போலீஸார் சென்றதாக தகவல்கள் கூறின. ஆனால் தற்போது இதில் அப்பாவி பொதுமக்கள் பயணித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 6ம் தேதி தாண்டேவாடா வனப்பகுதியில் சிஆர்பிஎப் வீரர்களை மாவோயிஸ்டுகள் வெறித்தனமாக தாக்கி 70 பேரைக் கொன்றனர்.

இந் நிலையில் மக்கள் பயணம் செய்த பேருந்தை தாக்கி 50 பேரை கொன்றுள்ள செயல் பெரும் அதிர்ச்சி அலைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: