காந்திநகர்:கடந்த திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி விபுல் அகர்வாலைத் தொடர்ந்து, ஷொராஹ்புத்தீன் போலி என்கவுண்டரை நேரில் கண்ட ஒரே சட்சியாளரான துள்சி பிரஜாபதியின் போலி என்கவுன்டர் விவகாரத்தில், சி.பி.ஐ மேலும் இரண்டு குஜராத் போலீஸ் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளது.
ஜேதாபாய் தர்பார் மற்றும் வினோத் னேய் ஆகிய இவ்விருவரையும் தான் சி.பி.ஐ கைது செய்துள்ளது.
ஷொராஹ்புத்தீனின் நெருங்கிய நண்பரான துள்சி பிரஜாபதி, ஷொராஹ்புத்தீன் கொல்லப்பட்டு சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு டிசம்பர் 2006ல், குஜராத் மாநில போலீசாரால் போலி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டார்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி அகர்வாலை (அப்போதைய துணை சூப்பர் இன்ட்ன்டென்ட்) சி.பி.ஐ விசாரணைக்கு எடுக்கும் பொருட்டு, பனஸ்கந்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னதாக, ஷொராஹ்புத்தீன் போலி என்கவுண்டர் வழக்கை சரியாக விசாரிக்காது உச்சநீதி மன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான ராஜ்காட் போலீஸ் கமிஷ்னர் கீதா ஜோஹ்ரி, கடந்த செவ்வாய் கிழமையன்று சி.பி.ஐ முன்னால் ஆஜரானார்.
ஷொராஹ்புத்தீன் வழக்கில் ஆறு மூத்த குஜராத் அதிகாரிகளை சி.பி.ஐ. விசாரிக்க உள்ளதை குறித்து பாலைவனத்தூது ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
source:Twocircles.net
Home
போலி என்கவுண்டர்
ஷொராஹ்புத்தீன் போலி என்கவுண்டர் வழக்கு - மேலும் இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள் கைது
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment