மங்களூர் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள்

மங்களூர்: மங்களூர் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருமே கர்நாடகா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. பெரும்பாலும் கேரள மாநிலத்தவர் என்றும் கூறப்படுகிறது.

மங்களூர் விமான விபத்து குறித்த தகவல்களை அறிய ஹைல்ப்லைன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மங்களூர்: 0824-2220422, 0824-2220424

டெல்லி: 011-25656196, 011-25603101

தொடர்ந்து மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்துவருகின்றன. படுகாயமடைந்த நிலையில்7 முதல் 10 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடக போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்புப் படையினர், கர்நாடக சிறப்புப் போலீஸ் படையினர் விபத்து நடந்த இடத்தில் முகாமிட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடம் மலைப் பாங்கான பகுதி என்பதால் தீயணைப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைய முடியவில்லையாம். 25 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் உதவின.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மங்களூருக்கு 150 மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரும்அனுப்பி வைக்கப்பட்டனர்.

மங்களூர் விமான நிலைய ரன்வேயின் நீளம் 8038 அடிதான். ஆனால் விமானம் இறங்கியபோது வேகமாக வந்ததால், ரன்வேயை விட்டு 2000 அடி அளவுக்கு விலகியுள்ளதாக தெரிகிறது. விமானத்தின் ஹைட்ராலிக் பிரேக் வேலை செய்யாததால் இது நேர்ந்திருக்கலாம் என்று தெரிகிறது.

விபத்தைத் தொடர்ந்து மங்களூர் விமானநிலையம்மூ்டப்பட்டது. மேலும் அருகில் உள்ள கெஞ்சார் கிராமத்திற்கும் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

மங்களூர் அருகே உள்ள பாஜ்பே என்ற இடத்தில்தான் விமான நிலையம் உள்ளது. இது சர்வதேச விமான நிலையமாக கூறப்பட்டாலும் அந்த அளவுக்கு இங்கு அதி நவீன வசதிகள் கிடையாது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த பலரும் அரபு நாடுகளிலிருந்து மங்களூர் வழியாகத்தான் தங்களது பகுதிகளுக்குச் செல்வது வழக்கம். குறிப்பாக காசர்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மங்களூர் விமான நிலையம்தான் அருகாமையாகும்.

விசாரணைக்கு உத்தரவு

இந்த சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் அலுவலகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: