கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே குழந்தைகளைக் கடந்தி விற்பனை செய்யும் கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் ஒரு பாதிரியாரும் அடக்கம்.
கிருஷ்ணகிரி அருகே பேரிகை கிராமத்தை சேர்ந்த ராமாக்காள் என்ற பெண் தனது 3 மாத ஆண் குழந்தையுடன் பஸ்சில் மருத்துவமனைக்குக் சென்றார்.
அப்போது, அவருடன் பஸ்சில் ஏறிய தனலட்சுமி என்ற பெண் அவரிடம் பேச்சு கொடுத்து குழந்தையை தன்னிடம் வாங்கி வைத்துக் கொண்டு, திடீரென குழந்தையுடன் தலைமறைவானார்.
இது குறித்து கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் ராமாக்காள் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை கடந்திய பெண்மணி குறித்து வலை வீசி தேடி வந்தனர்.
இதற்காக கிருஷ்ணகிரி எஸ்பி பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை தனலட்சுமியை கைது செய்தது.
விசாரணையில் பஸ்சில் கடத்திய குழந்தையை ராணி என்ற பெண்ணிடம் ரூ.1,000 க்கு விற்றதாக அவர் தனலட்சுமி வாக்குமூலம் கொடுத்தார்.
மேலும் 6 மாதத்திற்கு முன் தனது உறவினரின் மூன்று வயது மகன் தேவாவை கடத்தி ராணியிடம் விற்றதாகவும் கூறினார்.
இதையடுத்து ராணியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தேவாவை செஞ்சி தேவதானப்பட்டியை சேர்ந்த அல்போன்ஸ் சேவியர் என்ற பாதிரியாரிடம் ரூ. 20,000க்கு விற்றதாகத் தெரிவித்தார்.
பாதிரியாரைப் பிடித்து விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த குழந்தை இல்லாத மணி- ராணி என்ற தம்பதிக்கு ரூ. 40,000க்கு குழந்தையை விற்றது தெரிய வந்தது.
இதையடுத்து ராணி, பாதிரியார் அல்போன்ஸ் சேவியர், கிரிஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment