மனைவி-மகன்களை கடத்தியதாக நித்யானந்தா மீது கணவர் புகார்

நெல்லை: நித்யானந்தாவின் ஆசிரமத்தில் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்டுத் தருமாறும் நெல்லை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் புகார் தந்துள்ளார்.

தனது புகாரில், 4 ஆண்டுகளுக்கு முன் நித்யானந்தாவின் சீடரான டாக்டர் ஓஷோ மணி என்பவரிடம் எனது மனைவி விமலா சிகிச்சைக்காக சென்றார்.

அப்போது நித்யானந்தா பற்றி பிரச்சாரம் செய்து விமலாவை ஏமாற்றி, அவரையும் எனது 2 மகன்களையும் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு அழைத்து ஓலேஷா அழைத்துச் சென்றுவிட்டார்.

அவர்கள் பெங்களூரில் உள்ள நித்யானந்தாவின் பிடுதி ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை சந்திக்கச் சென்ற என்னை நித்யானந்தாவி்ன் சீடர்கள் அனுமதிக்கவில்லை.

எனவே அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று தனது புகாரில் ஜார்ஜ் கூறியுள்ளார்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: