வாலாஜாபேட்டை, ஜூன் 27: ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியில் உள்ள 100 ஆண்டு பழமைவாய்ந்த மசூதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முஸ்லிம்கள் ஞாயிற்றுக்கிழமை தொழுகை நடத்தினர் .
ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியில் இம்மசூதி அமைந்துள்ளது. ஷேக்அப்துல் வஹாப் ஹக்னுமா மசூதி என அழைக்கப்படும் இந்த மசூதி தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து
வந்தது. அதனால் இதில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த முடியவில்லை.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வாலாஜாபேட்டை,ராணிப்பேட்டை, ஆர்க்காடு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் இம்மசூதியை சீர்செய்தனர்.
அதைத் தொடர்ந்து மாலையில் 300-க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்தினர்.
தொழுகையின்போது எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதற்காக ராணிப்பேட்டை கோட்டாட்சியர் முகுந்தன், வாலாஜாபேட்டை வட்டாட்சியர் கிருபானந்தம், டி.எஸ்.பி.கள் பட்டாபி, மகேந்திரன் ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment