அல்காயிதாவுடன் தொடர்பு:ஏமன் நாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் அமெரிக்கர்கள்

வாஷிங்டன்:ஏமனில் அல்காயிதாவுடன் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் அமெரிக்கர்கள் என அமெரிக்க அரசுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.ஆனால் இதுத்தொடர்பாக கூடுதல் விபரங்களை அளிக்க க்ரவுலி மறுத்துவிட்டார்.

அமெரிக்க ஆதரவுடன் யெமனில் அல்காயிதாவுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அல்காயிதாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக ஏராளமான அயல் நாட்டவர்களை கைது செய்திருப்பதாக ஏமன் அறிவித்துள்ளது.

பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சார்ந்தவர்கள்தான் கைது செய்யப்பட்டவர்கள்.அயல் நாட்டு புலனாய்வு பிரிவுகள் அளித்த பட்டியலின் அடிப்படையில்தான் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என ஏமன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: