ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளை யொட்டி ஆயுள் தண்டனைகைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். கடந்த 2008-ம் ஆண்டு அதிக அளவில்1402 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில்உலகத்தமிழ்செம்மொழி மாநாட்டையொட்டி 500 கைதிகள் விடுதலை செய்யப்படவிருக்கிறார்கள்.
உலகத் தமிழ் செம் மொழி மாநாடு வரும் 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடை பெறுகிறது.
மாநாட்டை யொட்டி தமிழ்நாடு முழுவதும் நீண்ட நாள் தண்டனை அனுபவித்த கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
இதற்கான கணக்கெடுக்கும் பணி ஜெயில்களில் நடந்து வருகிறது. ஆயுள் தண்டனை கைதிகளில் 10 வருடம் சிறை தண்டனை அனுபவித்தவர்கள், மற்றும்3 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றவர்கள் என தமிழ்நாடு முழுவதும் 500கைதிகள் வரை விடுதலை ஆகிறார்கள்.
22-ந்தேதி அல்லது 23-ந்தேதி கைதிகளை விடுதலை செய்வதற்கான உத்தரவு வெளியாகும் என்று தெரிகிறது.
நன்றி: நக்கீரன்
முஸ்லிம்கள் விடுதலை செய்யப்படுவார்களா?
அல்லது
முன்பு போல்ஏமாற்றப்படுவார்களா?
பொறுத்திருந்து பார்ப்போம்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment