இரண்டு ஆண்டுகள் விசாரணை ஸ்தம்பித்ததற்கு பிறகு, 7/11 தொடர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கு பல ரகசியங்களுக்கு மத்தியில் கடந்த வாரம் மீண்டும் விசாரணை துவங்கியது.
MCOCA நீதிமன்றத்தின் ஐந்தாவது மாடியில் நடந்த இவ்விசாரணையில், மீடியாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த தளம் முழுவதுமே போலீசாரால் சீல் வைக்கப்பட்டது.
1993 தொடர்குண்டு வழக்கு, 26/11 மும்பை தாக்குதல், சாவேரி பஜார் குண்டுவெடிப்பு ஆகிய பிரபல வழக்குகளின் விசாரணை திறந்த நிலையில் நடத்தப்பட்டது. அதேபோல் தான், 2006 ஆண்டு 7/11 ரயில் தொடர் குண்டு வெடிப்பு விசாரணையும் ஒரு முக்கியமான வழக்கு என்று கூறலாம். இதில் சுமார் 188 மக்கள் உயிரிழந்தனர்.
சிமி இக்குண்டுவெடிப்புகளை நிகழ்தியதாக கூறி, இவ்வியக்கத்தின் 13 தொண்டர்களை மும்பை போலீஸ் கைது செய்தது.
இவ்வழக்கு விசாரணை நீதிமன்ற அறை என்.56ல் நடைபெற்றது. எதிர்பார்க்கப்படாத முறையில் அமைக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பில் கலவரப்படை போலீசார் உட்பட சுமார் 60 போலீசார் பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட்டிருந்தனர்.
லிப்ட்மேன் கூட ஐந்தாவது தளத்திற்கு வரவேண்டாம் என்று உத்திரவிடப்பட்டுள்ளார். MCOCA நீதிபதி வை.டி.ஷிண்டே நியமிக்கப்பட்டதற்கு பிறகு தான் இந்நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. இங்கு நிருபர்களுக்கு அனுமதி இல்லை போன்ற துண்டு நோட்டீஸ்களும் ஒட்டப்பட்டிருந்தன.
இதே நீதிபதி தான் மீடியாக்களுக்கு தகுந்த வசதிகள் செய்து தரப்படும் என்று கடந்த வாரம் கிரிமினல் வக்கீல் முபீன் சோல்கரிடம் வாக்களித்திருந்தார்.
SOURCE : MumbaiMirror
Home
Uncategories
7/11 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை: நீதிமன்றத்தில் மீடியாக்களுக்கு அனுமதி மறுப்பு
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment