ஆஷம்கர் கல்லூரி முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை பாட்னாவில் வெளியான செய்திதாள்களின் விளம்பரத்திற்கு குஜராத் அரசு போலியாக பயன்படுத்தியது என்பதை பதிவு செய்ய குஜராத் அரசு மறுத்துவிட்டது.
இந்த புகைப் படங்கள் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி பிஜேபி-இன் தேசிய சந்திப்புக் கூடத்திற்கு வருகை தரும் முன்பு பாட்னா செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது.
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அரசு செய்தி தொடர்பாளர் நாராயண வியாஸ் "அந்த புகைப் படங்கள் குஜராத் முஸ்லிம் பெண்கள் எவ்வாறு முன்னேறுகிறார்கள் என்பதை அடையாள படுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது." எனக் கூறினார்.
அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் www .twocircles.net
என்ற இணையதளம் இந்த புகைப் படங்களை முன்பே வெளியிட்டுள்ளது இவ்விணையதளம் கூறுகையில் "பிரசுரிக்கும் உரிமை மீறல் தொடர்பாக குஜராத் அரசின் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க அக்கறை கொண்டுள்ளது." என கூறி உள்ளது.
குஜராத் அரசு இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகும் என வியாஸ் தெரிவித்தார்.
போபால் மற்றும் ஆண்டர்சன் விவகாரம் ஆகியவற்றில் இருந்து திசை திருப்ப, பிஜேபி-க்கு எதிராக செயல் படும் காங்கிரஸ் மற்றும் அதன் வெளியே உள்ள அமைப்புகள் இந்த பிரச்சினையை உருவாக்கி உள்ளன என மேலும் அவர் கூறினார்.
இந்த விஷயம் குஜராத் சம்பந்தமாக உள்ள போது, இது ஏன் பாட்னா செய்தித் தாள்களில் விளம்பரப்படுத்தப் பட்டது என கேட்கும் போது. "பிகார் மாநில அரசு இந்த விளம்பரத்தை செய்திதாள்களில் வெளியிட்டுள்ளது குஜராதில் உள்ள முஸ்லிம்கள் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களை விட நல்ல நிலையில் உள்ளனர் என நாடு முழுவதும் பேசப் படவேண்டும் என்பதற்காக பிஜேபி-இன் சந்திப்புக் கூட்டம் நாட்டின் வேறெந்த மாநிலங்களில் நடைபெற்றாலும் அந்த மாநில அரசுகள் இந்த விளம்பரத்தை செய்திருக்கும்'. என்றார்.
மற்றொரு விளம்பரதில் பீகார் முதலமைச்சர் நிதிஸ் குமார் மோடியின் கைகளை பிடித்தவாறு உள்ளது. (இது மாதிரியான சம்பவங்கள் நிதிஸ்குமாருக்கு சட்ட நட வடிக்கைகள் எடுக்க ஊக்குவித்துள்ளது )
மற்றொரு புறம் வியாஸ் அளித்த தகவலின் படி சூரத்தில் வாழும் சில பீஹாரி மக்களால் இந்த விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதனால் குஜராத் அரசு இந்த விசயத்தில் செய்வதற்கு எதுவும் இல்லை என மேலும் அவர் கூறினார்.
இதே வேளையில் இந்த விளம்பரத்தை வெளியிட்ட சூரத்தை சேர்ந்த விஜய் பாலிவால் டெக்ஸ்டைல் தரகர் மற்றும் நிலைய உரிமையாளர். கூறுகையில் தான் ஏதும் தவறு செய்யவில்லை என சமாளிக்கிறார்.
குஜராத் பீகாரைப் போல ஒரு வளர்ந்து வரும் மாநிலம், இத்தகைய வளர்ந்து வரும் மாநிலங்களின் இரு முதல்வர்கள் சந்தித்துக் கொள்வது நல்ல அடையாளமாகும் அதனால் இந்த விளம்பரத்தை அவர் வெளி இட்டதாக கூறினார்.
மேலும் பாலிவால் பீகாரிலிருந்து குஜராத்திற்கு வந்து வாழ்ந்து வருகிறார். பீகருக்காக நரேந்திர மோடி அளித்த வெள்ள நிவாரண உதவிகள் மூலம் தான் கவரப்பட்டதாகும், தனக்கு எந்த அரசியல் கட்சிகளுடனும் தொடர்பு இல்லை என்றும் அவர் கூறினார்.
source:siasat
Home
Uncategories
அடையாளப் படுத்துவதற்கு மட்டுமே முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை விளம்பரத்திற்கு பயன்படுத்தியது: பிஜேபி
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment