ஹமாஸ் தலைவர் மப்ஹூவைக் கொடூரமாகக் கொலைச் செய்த மொஸாத் உளவாளிகள் அயர்லாந்திலிருந்து கள்ள பாஸ்போர்ட் எடுத்து பயன்படுத்தியுள்ளனர்.
முழுமையாக புலனாய்வு செய்யப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அயர்லாந்து பிரதமர் பிரியன் கோவனின் அரசு அந்நாட்டு இஸ்ரேலிய தூதரக அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்தது.
கடந்த ஜனவரி 20 ம் தேதி மப்ஹூஹ் துபாயில் கொல்லப்பட்டார். அவரைக் கொலை செய்த மொஸாத் உளவாளிகள் பிரிட்டன், ஆஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகளின் பாஸ்போர்ட்களை மோசடியாக பயன்படுத்தியுள்ளனர்.
இதனைக் கண்டறிந்த பிரிட்டனும், ஆஸ்திரேலியாவும் கடந்த மார்ச் மாதம் அந்நாடுகளின் இஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. அந்த வரிசையில் அயர்லாந்தும் தீவிர விசாரணைக்குப் பின் இஸ்ரேலிய தூதரக அதிகாரியை வெளியேற்றியுள்ளது.
source:7days
Home
Uncategories
ஹமாஸ் தலைவர் மப்ஹூஹ் கொலை: அயர்லாந்திலிருந்து இஸ்ரேலிய தூதரக அதிகாரி வெளியேற உத்தரவு
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment