ஸ்ரீநகர், ஜூன்.20: ஸ்ரீநகரின் நூர்பா பகுதியிலுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் முகாமைத் தாக்க நடத்த முயன்ற இளைஞர்கள் குழுவினர் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.
சஃபாகதல் பகுதியில் கடந்த ஜூன் 12-ம் தேதி பாதுகாப்புப் படையினருக்கும், சில ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் முகமது ரஃபீக் பாங்ரூ என்ற 25 வயது இளைஞர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாங்ரூ நேற்று இரவு உயிரிழந்தார். இன்று அவரது இறுதிச்சடங்கு முடிந்த பின்னர் நூர்பா பகுதியிலுள்ள சிஆர்பிஎஃப் முகாமை இளைஞர்கள் குழுவினர் தாக்க முயன்றதால் போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் காயமடைந்த 5 பேரில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவித்தன.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment