செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதில் ஒரு இலங்கையராக பெருமிதம் - ரவூப் ஹக்கீம்

ஒரு இலங்கையராக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்திருப்பதாக அறியப்படுகிறது. தமிழகத்தின் கோவையில் செம்மொழி மாநாடு பொது அரங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹக்கீம், கொழும்பிலிருந்து வெளி வரும் 'வீரகேசரி' பத்திரிகைக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டதாக அறிய முடிகிறது. இது தொடர்பாக மேலும் அறிகையில்;

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெகு விமரிசையாக கோவையில் நடைபெறுகின்ற இச்சந்தர்ப்பத்திலே தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் அழைப்பினை ஏற்று இங்கு பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன். அதிலும் வந்தாரை வரவேற்று வாழவைக்கும் கோவை மாநகரிலே இந்த மாநாடு நடைபெறுகின்றது. அதனால் மகிழ்ச்சி அடைகின்றேன்.
எந்த பேதங்களுமின்றி தமிழ்பேசும் முஸ்லிம்களாகிய எம்மையும் மதித்து இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். விழாக்கோலம் பூண்டிருக்கும் கோயம்புத்தூரில் தொடர்ந்தும் தங்கியிருந்து நிகழ்ச்சிகள் அனைத்தையும் பார்ப்பதற்குக் காத்திருக்கிறோம் என்றார்.

இந்த மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பஷிர் சேகுதாவுத், ஹசன் அலி ஆகியோரும் கலந்துகொண்டிருப்பதாக மேலும் அச் செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: