காவல் நிலையத்தில் இளம்பெண் தூக்கு!!

பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸ்சை சேர்ந்த இளம்பெண் சரப்ஜித் கவுர்(27). இவரை திருட்டு வழக்கில் கைது செய்து போலிசார் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

இந்நிலையில் "சரப்ஜித் கவுர்" காவல்நிலைய மின்விசிறியில் பிணமாக தொங்கினார். சரப்ஜித் கவுர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் அவரை போலீசார் அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்றும் சரப்ஜித் பெற்றோர்கள் புகார் கூறினார்கள்.

ஆத்திரம் அடைந்த சரப்ஜித்தின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: