இந்த ஆண்டும் இ.சி.இ- கம்ப்யூட்டர் சயின்சில் சேரவே அதிக போட்டி

சென்னை: இந்த ஆண்டும் வழக்கம்போல் பொறியியல் படிப்பில் எலெக்ட்ரானிக் கம்யூனிஸ்கேஷன் (இ.சி.இ) பிரிவில் சேரவே மாணவ-மாணவிகள் இடையே அதிகமான போட்டி நிலவுகிறது.

கடந்த ஆண்டுகளைப் போலவே இ.சி.இ, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளுக்கே அதிக டிமாண்ட் நிலவுகிறது. அதற்கு அடுத்த நிலையில் தான் மெக்கானிக்கல் மற்றும் சிவில் என்ஜினீயரிங் பிரிவுகளில் சேர மாணவர்களிடையே ஆர்வம் நிலவுகிறது.

தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள இ.சி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

இதனால் இ.சி.இ, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவுகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க அனுமதி கோரி தனியார் கல்லூரிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங்கிலும் இ.சி.இ. பிரிவில் சேரவே அதிக மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவகர் கூறுகையில்,

இந்த ஆண்டும் இ.சி.இ, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவுகளில் தான் அதிக மாணவ-மாணவிகள் சேருகின்றனர்.

தனியார் பொறியியல் கல்லூரிகள் இ.சி.இ, கம்ப்யூட்டர் சயின்ஸ் இடங்களை அதிகரிக்கக் கோரி, அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலுக்கு விண்ணப்பித்துள்ளன.

புதிதாக 50 பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி கேரியும் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றின் கட்டமைப்பை ஆய்வு செய்ய கமிட்டி அமைக்க அகில இந்திய பொறியியல் கல்வி குழுமம் உத்தரவிட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டாக வேண்டும். இதன்மூலம் கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்றார்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: