அஹ்மதாபாத்:ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில், குஜராத் பாதுகாப்பு அமைச்சர் அமித் ஷாவை விசாரிப்பதற்காக சி.பி.ஐ விரைவில் சம்மன் அனுப்பவுள்ளது.
இது குறித்து சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கையில், ஷொராஹ்ப்தீன் வழக்கில் சில புரியாத புதிர்கள் உள்ளதாகவும், அமைச்சர் அமித் ஷாவை விசாரித்தால் மட்டுமே இதற்கான விடைகளை காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்மன் கடந்த செவ்வாயன்று அனுப்புவதாக இருந்தது ஆனால் அமைச்சரின் தாயின் மரணத்தால் சி.பி.ஐ அதிகாரிகள் சம்மன் அனுப்புவதை ஒத்திவைத்துள்ளனர்.
காந்தி நகரில் உள்ள அமித் ஷாவின் அலுவலகத்திற்கு இச்சம்மன் அனுப்பப்படும் ஆனால் வழக்கின் விசாரணை மும்பையிலேயே தான் நடக்கும். இந்த விவகாரத்தினால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் வரலாம் என்று சி.பி.ஐ கருதுகிறது.
இதனிடையே இவ்வழக்கில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி அபே சுதாச்சமாவின் ஜாமீன் மனுவில் சி.பி.ஐ நீதிமன்றம் நாளை முக்கிய தீர்ப்பு கூறவுள்ளது.
source:Times of india
Home
Uncategories
ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கு: குஜராத் பாதுகாப்பு அமைச்சருக்கு சி.பி.ஐ விரைவில் சம்மன்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment