டெல்லி டெல்லியில், திருட்டு விசாரணைக்காக அழைத்து வந்த பெண்ணை அறையில் பூட்டி செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுமாறு போலீஸ்காரர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாயாபுரி குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர் மயூரி. 30 வயதுப் பெண்ணான இவருகுக்கு ராஜு, ரமேஷ் என இரு மகன்கள். இதில், 12 வயதான ராஜு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்த பொருட்களை திருடி விட்டதாக காருக்குரிய பெண் போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து ராஜுவை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதையறிந்து மயூரி காவல் நிலையம் விரைந்து வந்தார். தனது மகன் நிரபராதி என்று கூறி அழுதார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத போலீஸ்காரர்கள், மயூரியையும் பிடித்து விசாரித்தனர். பின்னர் ஒரு அறையில் அவரைப் பூட்டினர்.
அப்போது அங்கு வந்த ஒரு போலீஸ்காரர் மயூரியின் அறைக்குள் நுழைந்து விசாரித்தார். பின்னர் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால் விட்டு விடுவதாக மிரட்டினார். ஆனால் அதற்கு மயூரி உடன்படவில்லை. இதையடுத்து அவரது உடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி அட்டகாசம் செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கதறி அழுதுள்ளார். இதைப் பார்த்த மற்ற போலீஸ்காரர்கள், காமவெறி பிடித்த அந்தப் போலீஸ்காரரை விலக்கி விட்டு, அந்தப் பெண்ணை விடுவித்தனர்.
விடுபட்ட மயூரி நடந்த சம்பவம் குறித்து துணை கமிஷனரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து இதுதொடர்பாக விசாரணைக்கு துணை கமிஷனர் சரத் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment