
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் - கடந்த செவ்வாய்க்கிழமை (15.06.2010) ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் அமைந்துள்ள ஷஃபாத் அகதி முகாமிலே வசித்துவரும் ஜெரூசலவாசிகளுக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் அகதி முகாம்வாசிகளை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தியதோடு, கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் கிரனைடுகளையும் எறிந்தபோது, ஜெரூசலவாசிகள் கற்களையும் வெற்றுப் போத்தல்களையும் வீசிப் பதில் தாக்குதல் நடாத்தினர் என மேற்படி சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அகதி முகாம்வாசிகள்மீது கடும் தாக்குதல் நடாத்தும் பொருட்டு சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தைச் சுற்றி உடனடியாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வாகனங்கள் குவிக்கப்பட்டதோடு, பாதைத் தடையும் அமுல்நடாத்தப்பட்டது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
புனித ஜெரூசல நகரில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்களின் விளைவாக, மேற்படி அகதி முகாமில் வசித்துவரும் ஜெரூசலவாசிகளுக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் இடம்பெறுவதால், இப்பகுதியில் தொடர்ந்தும் பதட்டநிலை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
நன்றி: PIC
0 comments:
Post a Comment