அன்றில் இருந்து இன்று வரை தமது புராண-இதிகாச கதைகளுக்கு ஆதாரம் தேடி , சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தி பலஸ்தீன மண்ணை கிட்டி புரட்டி வருகின்றது . இஸ்ரேல் உருவாகி 60 ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை. பலஸ்தீன மக்களின் 80 வீதமான நிலம் தோண்டப்பட்டது ஆனால் இவர்களின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக 1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்கவில்லை மாறாக முஸ்லிம்களின் வரலாற்றை கூறுபவையாக இருந்தது , தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. யூத அடிப்டை வாதிகளில் ஒரு பகுதியினர் இஸ்ரேல் என்ற நாடு சட்டவிரோத மானது அப்படி ஒரு நாட்டை உருவாக்கியமை யூத மத அடிப்படை கோட்பாடுகளுக்கு மாறானது என்ற குரல் சற்று வலுவாக ஒலிக்க காரணமாக அமைந்தது. இஸ்ரேல் என்ற நாடு சட்ட விரோதமானது என்று கூறும் அமெரிக்க யூதர்களில் ஒரு பிரிவினர் கடந்த மாதம் அமெரிக்காவில இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசுக்கு எதிராக செய்த ஆர்ப்பாட்டத்தை இங்கு பார்க்கலாம்.

0 comments:
Post a Comment