சியோல்:தென்கொரியாவால் ஏவப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய ஏவுகணை புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுவானில் வெடித்துச் சிதறியுள்ளது.
தென்கொரியாவால் கடந்த வியாழக்கிழமை ஏவப்பட்ட த-நரோ1 என்ற ஏவுகணை, ஏவுதளத்திலிருந்து புறப்பட்டு 2.17 நிமிடங்கள் கடந்த நிலையில் வெடித்துச் சிதறியது.
ரஷ்யத் தயாரிப்பான இந்த த-நரோ1 ஏவுகணைக்கு தென்கொரியாவிலேயே முழு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த ஏவுகணையை ஏவுவதற்கு தென்கொரியா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், தற்பொழுது இரண்டாவது தடவையாக மேற்கொண்ட முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.
த-நரோ1 ஏவுகணை வழியிலேயே வெடித்துச் சிதறியதால் தென்கொரியாவின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ரீதியை விண்ணில் செலுத்துதல் என்ற இலக்கும் ஆசியாவின் விண்வெளியில் தென்கொரியாவின் அங்கம் வகிக்க வேண்டுமென்ற எண்ணமும் தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில், த-நரோ1 ஏவுகணை வெடித்துச் சிதறியது குறித்த விசாரணைகளை தென்கொரிய மற்றும் ரஷ்ய நிபுணர்கள் ஆரம்பித்துள்ளனர்.
தென்கொரியாவால் ஏவப்பட்ட இந்த ஏவுகணை ஆசியாவின் மிகப் பெரிய ஏவுகணை எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், நடுவானில் வெடித்துச் சிதறியுள்ள ஏவுகணையின் சிதைவுகள் கடலில் விழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரைம்ஸ் ஒவ் இந்தியா
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment