மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானிடமிருந்து நம்பகமான நடவடிக்கை தேவை என இந்தியா வலியுறுத்தும் என இந்திய அயலுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
இந்திய - பாகிஸ்தான் அயலுறவுத் துறைச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வருகிற 24 ஆம் தேதியன்று இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்பதற்காக இந்திய அயலுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ், நாளை பாகிஸ்தான் புறப்பட்டு செல்கிறார்.
இந்நிலையில், பாகிஸ்தான் அயலுறவுத் துறைச் செயலர் சல்மான் பசீருடன் தாம் நடத்த உள்ள பேச்சுவார்த்தையின்போது, மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் பாகிஸ்தான் நம்பகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்தியா சார்பில் வலியுறுத்த இருப்பதாக நிருபமா ராவ் இன்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் அயலுறவுத் துறைச் செயலருடன் நடத்த இருக்கும் பேச்சுவார்த்தையில் இடம் பெறும் முக்கிய விடயங்களில் மும்பை தாக்குதல் தொடர்பான பிரச்னை முக்கியமாக இடம் பெறும் என்றார்.
இதனிடையே நிருபமா ராவின் பாகிஸ்தான் பயணத்தை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, வருகிற வெள்ளிக்கிழமையன்று இஸ்லாமாபாத் செல்ல உள்ளார்.
26 ஆம் தேதியன்று நடைபெற உள்ள சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க இருக்கும் அவர், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கை தனியாக சந்தித்துப் பேசுகிறார். அப்போது அவரும் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்துவார் என நிருபமா தெரிவித்தார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment