ஷாங்காய்:மேற்கத்திய சக்திகள் விஞ்ஞானத்தையும், தொழில்நுட்பத்தையும் சுயலாபத்திற்காக ஏகபோக சொத்தாக மாற்றிவருவதாக ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் தெரிவித்துள்ளார். இதர நாடுகள் அமைதிக்காக அணுசக்தி தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதை எதிர்க்கும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் விருப்பத்தைக் குறித்து கேள்வி எழுப்பவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
சீன நகரான ஷாங்காய் உலக கண்காட்சியில் ஈரான் சார்பாக அளிக்கப்பட்ட வாழ்த்துச் செய்தியில்தான் அஹ்மத் நிஜாத் இதனை தெரிவித்துள்ளார். வீட்டோ அதிகாரம் உடைய நாடுகள் அதனை தவறாக பயன்படுத்துகின்றன. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நடைபெற்ற கூட்டுப் படுகொலைகளுக்கு பிறகு தற்பொழுது பாகிஸ்தானுக்கு நகர்ந்துள்ள அமெரிக்காவின் முயற்சிகளுக்கு தடை போடாவிட்டால் பலன் துயரகரமானதாக இருக்கும்.
ஃபலஸ்தீனில் நிலையற்றத் தன்மையின் பக்கம் அமெரிக்கா ஆதரவளிக்கிறது. ஏகாதிபத்திய நடவடிக்கைகளை உலக மக்கள் எதிர்க்கவேண்டும். நிந்தனைக்குரிய தீர்மானங்களை புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அஹ்மத் நிஜாத் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்த பொழுதும், உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு குழுவின் உச்சிமாநாட்டில் நிஜாத் பங்கெடுக்கவில்லை. இக்குழுவின் கண்காணிப்பாளர்களில் ஒருவர்தான் நிஜாத். ஐ.நா தடையை சீனா ஆதரித்த பொழுதிலும், சீனாவுடனான வியாபாரத் தொடர்பை விவாதிப்பதற்காகத்தான் நிஜாத் வருகைப் புரிந்திருந்தார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment