இஸ்லாமாபாத், ஜூன் 20: இந்தியாவுடன் எப்போதும் நட்புறவை வளர்த்துக் கொள்ளவே விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானி தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு வந்துள்ள அந்நாட்டுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ரிச்சர்டு ஹோல்புரூக்கை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசுகையில் கிலானி இதைத் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக தீர்வு காண முடியாமல் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இவற்றால் இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் விவகாரம், நதி நீர்ப்பிரச்ûó உள்பட இந்தியாவுடனான அனைத்து நீண்டகாலப் பிரச்னைகளையும் சுமுகமாகவும், அமைதியான முறையிலும் பேசித் தீர்த்துக் கொள்ளவே பாகிஸ்தான் விரும்புகிறது கிலானி குறிப்பிட்டார்.
பாகிஸ்தானுக்கு விரைவில் வருகை தரவுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோரின் பயணம் குறித்து தெரிவித்த கிலானி, அண்டை நாடுகள் என்ற முறையில் இரு நாடுகளிடையேயான உறவு வலுப்படவே நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவுடன் தடைபட்டிருந்த அமைதிப் பேச்சுவார்த்தை இரு நாட்டுத் தலைவர்களின் முயற்சியால் மீண்டும் தொடங்கியுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆசியப் பிராந்தியத்திலும், உலகத்திலும் அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கில்தான் இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் மீண்டும் தொடங்கியுள்ளது என்றார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment