ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை விதித்துள்ளதை அடுத்து வெளிநாடுகளில் இருந்து ஈரானுக்கு எந்தவித பொருளாதார உதவியும் ஆயுத இறக்குமதியும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
தடைக்கு முன்பாக ரஷியாவிடம் இருந்து எஸ்-300 என்ற அதிநவீன ஏவுகணையை ஈரான் விலைக்கு வாங்கி வந்தது.
இந்த நிலையில் பிரான்ஸ் வந்த ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், அந்நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோஷியை சந்தித்து பேசினார். பின்னர் புடின் செய்தியாளர்களிடம் பேசும்போது "ஈரானுக்கு ஏவுகணை விற்கப்படுவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், பொருளாதார தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரானுக்கு எஸ்-300 ஏவுகணை விற்பனை செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment