
ஆஃப்கனிலிருந்து படையை வாபஸ் பெறும்படி பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு அதிக அழுத்தம் வந்து கொண்டிருக்கின்றது. இதனை ஒப்புக்கொண்ட கேமரூன் "2010 வருடம் மிகவும் முக்கியமான ஒன்று தாலிபானின் மிரட்டலை முறியடிக்க வேண்டும். அதிகமான பிரிட்டீஷ் படைகள் கொல்லப்படலாம்" என்று கூறினார்.
எப்பொழுது படை வாபஸ் பெறப்படும் என்று கேட்கப்பட்ட பொழுது அதற்கு உறுதியான தேதியை தெரிவிக்காமல், "தேவைக்கு அதிகமாக ஒரு நாள் கூட பிரிட்டீஷ் படை அங்கே இருக்காது" என்று கேமரூன் மழுப்பினார். பிரிட்டீஷ் படைகள் அமெரிக்க படையுடன் சேர்ந்து 'தாலிபானைத் தேடுகிறோம்' என்ற போர்வையில் நவீன குண்டுகளை அப்பாவி மக்கள் மீது வீசி மக்களை கொன்று குவித்து வருகின்றன. வரலலற்றில் ஆப்கானிஸ்தானை யாரும் வென்று அதில் நிலையான ஆட்சி நடத்தியாதாக காண முடியவில்லை. எத்தனயோ வல்லரசுகள் தோற்று போகி மண்ணை கவ்வினர் தங்கள் மூதாதையர் வழியில் இவர்களும் மண்ணை கவ்வுவார்கள்.
0 comments:
Post a Comment