இஷ்ரத் வழக்கு:சிபிஐ மற்றும் மாநில அரசுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
அஹ்மதாபாத்:குஜராத் உயர்நீதிமன்றத்தின் அமர்வு நீதிமன்றம் 2004ல் நடந்த இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் வழக்கில் சிபிஐ மற்றும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இஷ்ரத்துடன் கொல்லப்பட்ட ஜாவித் குலாம் ஷேக் என்கிற ப்ரனேஷ் குமார் பிள்ளையின் தந்தை கோபிநாத் பிள்ளையின் மனுவைத் தொடர்ந்து நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பித்துள்ளது.
நீதிபதிகள் ஜயந்த் பட்டேல் மற்றும் Z.K.சயீத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் 'தன் மகனின் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும்' என்ற கோபிநாத்தின் மனுவை தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பினர்.
ஜூலை 5ம் தேதிக்குள் பதில் தருமாறு குஜராத் அரசு மற்றும் சிபிஐயை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
மும்பை வாசிகளான இஷ்ரத் (19), மற்றும் ப்ரனேஷ், அம்ஜாத் அலி என்கிற ராஜ்குமார் அக்பர் அலி ரானா, ஜிஸான் ஜொஹர் அப்துல் கனி ஆகியோர் அஹ்மதாபாத் அருகே ஜூன் 15,2004ல் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.
மத்திய புலனாய்வுத்துறை தந்த விவரங்களின் அடிப்படையில், இஷ்ரத் மற்றும் மூவர் லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்தவர்கள், முதலமைச்சர் நரேந்திர மோடியை கொல்வதற்காகவே வந்தனர் என்று குஜராத் போலீஸ் விளக்கமளித்தது.
நீதிபதி S.P.தமாங்க், 'இது ஒரு போலி என்கவுண்டர் என்றும் சில போலீஸ் அதிகாரிகளால் சுய இலாபத்திற்காக செய்யப்பட்டது' என்று தனது விசாரணை அறிக்கையில் கூறியிருந்தார்.
தீவிரவாத எதிர்ப்பு படையின் SP கிரிஷ் சிங்கால் மற்றும் மாநில அரசின் மனுக்களையும் நீதிமன்றம் விசாரணை செய்யும்.
நீதிபதி தமாங்கின் செப்டம்பர் 2009 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிங்கால், என்கவுண்டரை போலி என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நீதிபதிகளின் கோரிக்கையை எதிர்த்து வாதாடுகிறார். தமாங்கின் அறிக்கைக்கு மாநில அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது மேலும் இது நீதிவிசாரணை அதிகாரத்தை மீறியதாகவும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
SOURCE : siasat
0 comments:
Post a Comment