பஹ்ரைன்:வட்டி அமைப்பிலான பொருளாதார அமைப்பு பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் இவ்வேளையில் இஸ்லாமிய பொருளாதாரத்தின் பக்கம் மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகின்றது.
இந்த வருடம் இஸ்லாமிய வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகள் ஒரு ட்ரில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்த அசுர வளர்ச்சியை அதிகக் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். இப்பொழுது நிலவிவரும் சர்வதேசப் பொருளாதார நெருக்கடியிலிருந்து பாடங்களைப் பயில வேண்டும்".என்று பஹ்ரைன் மத்திய வங்கியின் கவர்னர் ரஷீத் அல் மராஜ் தெரிவித்துள்ளார்.
"இரண்டு வருடங்களுக்கு முன்பு சர்வதேசப் பொருளாதார நெருக்கடி வெடித்தது. அதன் பிறகு இஸ்லாமியப் பொருளாதாரத்தின் பக்கம் ஆர்வம் பெருக்கெடுத்து வருகிறது. ஆனால் இதற்கு ஈடுகொடுக்கக் கூடிய அமைப்பில் திருப்தியில்லை" என்று மேலும் அவர் கூறினார்.
சிங்கப்பூர் வணிகத்துறை அமைச்சர் லிம் ஹிங் கியாங் பஹ்ரைன் மத்திய வங்கி கவர்னரின் கருத்தை ஆமோதித்தார்.
இது குறித்து மேலும அவர் தெரிவிக்கையில் "இஸ்லாமியப் பொருளாதாரத்தின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளதற்கு, இப்பொழுதுள்ள பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தியுள்ள கசப்பான அவலங்களே இதற்குக் காரணம்" என்று அவர் கூறினார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment