ஐக்கிய ஜனதாதளத்தின் முக்கிய தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் பாஜகவுடனான தனது உறவை முறித்து விட்டு வந்தாலும் கூட காங்கிரஸ் கட்சி அவருடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
காங்கிரசின் இந்த அதிரடி அறிவிப்பு பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதிஷ் குமார் பாஜக உடனான மோதல் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி பேசும்போது இந்த கருத்தினை தெரிவித்தார்.
தற்போது நிதிஷ்குமார் தலைமயிலான ஒரு அணியும் லாலு மற்றும் ராம் விலாஸ் பாஸ்வான் இருவரின் கூட்டணியும் முக்கிய அணிகள்ளக உள்ளன . இதில் நிதிஷ் பாஜக கூட்டில் ஓட்டை விழுந்துள்ளது.
நிதிஷ் குமார் காங்கிரஸ் கூட்டணி கூட்டணி ஒருவேளை ஏற்படக்கூடும் என யூகங்கள் புறப்பட்ட சூழலில் காங்கிரஸ் கட்சியின் அதிரடி அறிவிப்பு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Home
Uncategories
பாஜகவை உதறி விட்டு வந்தாலும் சரி நிதிஷ் குமாருடன் கூட்டணி கிடையாது காங்கிரஸ் திட்டவட்டம்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment