பஸ்ரா:ஈராக்கின் தென் நகரமான பஸ்ராவில் மின் தடைக்கெதிராக நடந்த ஆர்பாட்டதைக் கலைக்க போலீஸ் துப்பாக்கிச் சூடூ நடத்தியது. இதில் ஒருவர் பலியானார் இருவர் படுகாயமுற்றனர்.
5 மணி நேரத்திற்க்கு ஒரு மணி நேரமே மின்சாரம் வழங்கபடுகிறது இதனைக் கண்டித்து ஆயிரக்கணகானவர்கள் ஒன்று கூடினர்.
மின்துறை அமைச்சர் கரீம் வாலத் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஈராக்கில் வெப்பநிலை 54 டிகிரி செல்சியஸ் வரை செல்கிறது.
ஆர்பாட்டகாரர்கள் கல் வீச்சீல் ஈடுபட்டனர் இதில் அந்த பகுதி மின்சார அலுவலகங்கள் சேதமடைந்தன அவர்களைக் கலைப்பதற்க்கு போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது "எங்களுக்கு எண்ணையோ மருந்தோ தேவை இல்லை எங்களுக்கு வேண்டியது தண்ணீரும் மின்சாரமும்" என்று ஆர்ப்பாட்டகாரர்கள் ஏந்திய அட்டைகளில் எழுதபட்டிருந்தது.
பஸ்ரா மக்கள் குடிமக்களுக்கு சேவை செய்யும்படி அதிகாரிகளைக் கோருகிறார்கள் என்று இன்னொரு வாசகம் சொன்னது.
7days
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment