வெடிகுண்டு, துப்பாக்கி சூடு, ராக்கெட் வீசி தாக்குதல் ஆகியவற்றால் தெற்கு ஆப்கானில் தாலிபான் தீவிரவாதிகள் 12 நேட்டோ படையினரை கொன்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பலியான 12 பேரில் 4 பேர் பிரிட்டிஷ் படையினர் 8 பேர் அமெரிக்க படையினர்.
தெற்கு மாகாணமான காந்தஹாரில் தாலிபான் நேற்று கார்குண்டை வெடிக்கச் செய்ததோடு, ராக்கெட் குண்டுகளையும், சிறு சிறு நெருப்பு ஆயுதங்களையும் அங்கிருந்த காவல்துறை முகாம் மீது பிரயோகித்தனர்.
இதில் 5 அப்பாவி ஆப்கான் மக்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜூன் 1 முதல் தாலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல்களினால் 160 அப்பாவி மக்கள் உயரிழந்துள்ளதாகவும், குறைந்தது 365 நேட்டோ படையினர் இந்த ஆண்டில் மட்டும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ராணுவ அதிகார் ஜெனரல் ப்ளோட்ஸ் தெரிவித்தார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment