சென்னை : அரசு அமைத்த நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை வசூலித்த 8 மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று தமிழக அரசுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
பள்ளிகளுக்கான கட்டண விகிதத்தை நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அறிவித்தது. ஆனால் இதை பெரும்பாலான பள்ளிகள் ஏற்கவில்லை. மாறாக, கூடுதலான கட்டணத்தையே தொடர்ந்து வசூலித்து வருகின்றனர். இதுதொடர்பாக நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டிக்குப் புகார்கள் வந்தன.
இது உண்மைதானா என்பதை அறிந்து அறிக்கை தரும்படி அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி கடிதம் அனுப்பியது.
இதையடுத்து 4 மாவட்டங்களில் 8 மெட்ரிகுலேசன் பள்ளிகளில் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக முதன்மை கல்வி அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்த பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் தேவராஜனுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment