நெல்லை: பாளையங்கோட்டை- திருவனந்தபுரம் சாலையில் துண்டு துண்டாக சிதறி கிடந்த மனித உடல் உறுப்புகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டை- திருவனந்தபுரம் சாலையில் நேற்று மாலை 40 வயது மதிக்கத்தக்க ஒருவரது உடல் துண்டு துண்டாக சிதறிக் கிடந்தது. உடலில் ஆடை எதுவும் இல்லாத நிலையில் கை, கால்கள் ஆங்காங்கே விழுந்து கிடந்தன.
சாலையி்ல் சென்ற வாகனங்கள் அதன் மேல் ஏறி சென்றதால் பல உறுப்புகள் உருகுலைந்தன. இச் சம்பவத்தை விபத்து என்று உறுதி செய்ய முடியாத போக்குவர்தது புலனாய்வு போலீசார் வழக்கை பெருமாள்புரம் போலீசில் ஒப்படைத்தனர்.
பெருமாள்புரம் போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத அந்த நபர் குறித்த விபரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment