
இந்தியாவின் டெல்லி, கேரளா, கோவா ஆகிய மாநிலங்களில் ஏழைகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. ஐ.நா.மனிதவள மேம்பாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளது. டெல்லி, கேரளா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக ஓரளவு வறுமை குறைந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு, உத்தரகாண்ட், மகாராஷ்ட்ரா, ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் உலகிலேயே மிக அதிக அளவில் வறுமை தாண்டவமாடுவது தெற்காசியாவில்தான் என்றும், இதில் பங்களாதேஷில் 58 விழுக்காடு, இந்தியாவில் 55 மற்றும் நேபாளத்தில் 65 விழுக்காடு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவில் உள்ள 26 ஏழைநாடுகளில் உள்ளவர்களை (410 மில்லியன்) விட, இந்தியாவின் பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜ்ஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களில் உள்ள (421 மில்லியன்) மக்கள் மிக அதிக வறுமையில் வாடுவதாக இதே ஆய்வில் தெரியவந்துள்ளதாக கடந்த இரு மூன்று தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment