அகமதாபாத்: போலி என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்ட சோராபுதீன் ஷேக்கின் மனைவி கெளசர் பீபி அடைத்து வைக்கப்பட்டிருந்த அர்ஹாம் பண்ணையின் உரிமையாளர் சுரேந்திர ஜுரவாலா சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பண்ணையில்தான் கெளசர் பீபியை அடைத்து வைத்து பின்னர் போலீசார் கொலை செய்தனர். அதன் பின்னர் அங்கிருந்து அவரது உடலை இல்லால் கிராமத்திற்குக் கொண்டு சென்றனர். இது முன்னாள் டிஜிபி வன்சாராவின் சொந்த ஊராகும். இந்தக் கொலையைச் செய்ததும் உடலை எரித்ததும் வன்சாரா அன்ட் டீம் தான். இவர்களுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்தது குஜராத் அமைச்சர் அமித் ஷா என்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந் நிலையில்தான் பண்ணை உரிமையாளரை சிபிஐ கைது செய்துள்ளது. சம்பவ தினத்தில் (2005, நவம்பர்25 முதல் நவம்பர் 29 வரை) என்ன நடந்தது என்பதை சிபிஐ அவரிடம் விசாரிக்கவுள்ளது. இந்த நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் சோராபுதீனையும், கெளசர் பீபியையும் இந்தக் கும்பல் கொலை செய்தது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment