ஈரானுக்கு எதிராக மேற்குலக நாடுகளின் நடவடிக்கைகள் அணு ஆயுதப் போருக்கு வழிவகுக்கும்- பிடல் காஸ்ட்ரோ


ஹவானா:நான்கு வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக தொலைக்காட்சியில் தோன்றி பேட்டியளித்துள்ள கியூபா முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ ஈரானுக்கெதிரான நடவடிக்கைகள் அணு ஆயுதப் போரை உருவாக்குமென எச்சரித்துள்ளார்.

எச்சரிக்கையுடன் கூடிய தோற்றத்துடன் காணப்பட்ட 83 வயதான காஸ்ட்ரோ சர்வதேச விவகாரம் தொடர்பில் நீண்டநேரம் உரையாடியபோதும் சில நேரங்களில் அவரது குரல் பலவீனமடைந்தும் கரகரப்பாகவும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2006 முதல் குடல் நோயால் பாதிப்படைந்த பின்னர் கடந்த வார இறுதியில் முதல் தடவையாக பொதுமக்கள் மத்தியில் தோன்றிய காட்சிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெற்ற காஸ்ட்ரோ 2004 இல் சகோதரர் ரவூல் காஸ்ட்ரோவிடம் அதிகாரத்தைக் கையளித்த பின்னர் மிகவும் அரிதாகவே கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், 4 வருடங்களுக்குப் பின்னர் கியூபா அரசு தொலைக்காட்சிக்கு நீண்டநேரப் போட்டியொன்றை வழங்கிய காஸ்ட்ரோ இதில் ஈரானுக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.

'அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடான இஸ்ரேலும் ஈரானுக்கெதிரான சர்வதேசத் தடைகளைத் தொடர்ந்து அமுல்படுத்தி வந்தால் அது அணு ஆயுதப் போரொன்றை உருவாக்கும். போர் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்து வருவதாகவே நான் கருதுகிறேன். அவர்கள் நெருப்புடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்' என காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

அத்துடன்,ஈரானிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலோ பரவிவரும் அணு ஆயுத அச்சுறுத்தலைக் குறைப்பதற்குச் சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக மத்திய கிழக்கிலுள்ள எண்ணெய் வளப் பிராந்தியங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுத்து வருவதாகவும் காஸ்ட்ரோ குறிப்பிட்டுள்ளார்.

கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவியில் தொடர்ந்து இருக்கும் காஸ்ட்ரோ அண்மைக்காலமாக அரச் பத்திரிகைகளின் ஆசிரிய தலையங்கங்கள் வாயிலாக தனது கருத்துகளை வெளிப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: