மும்பை தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாபின் மேல்முறையீட்டு மனு மீது,கசாபிற்காக வாதாட மும்பை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞருக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை விதித்து தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் கசாப் மேல்முறையீடு செய்துள்ளான்.
இதில் கசாப் சார்பாக வாதாட பெண் வழக்கறிஞர் பர்ஹானா ஷா மற்றும் அமின் சோல்கர் ஆகியோரை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.
இந்த நிலையில், சோல்கருக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக கொலை மிரட்டல் வந்தது.
அதில், 'வழக்கில் இருந்து உடனே விலக வேண்டும். கசாபுக்கு ஆதரவாக நீதி மன்றத்தில் வாதாடக் கூடாது.மீறி நீதிமன்றத்துக்கு சென்றால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று கூறப்பட்டு இருந்தது.
இது பற்றி போலீசில் சோல்கர் புகார் செய்தார். எனினும், அவர் தனக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேட்கவில்லை.
இருப்பினும், வழக்கின் முக்கியத்துவம் கருதி சோல்கருக்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பர்ஹானாவுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.
முன்னதாக வழக்கறிஞர் பர்ஹானாவை கொலை செய்யும் நோக்கத்தோடு வந்த ஒரு கும்பல் அவருடைய அலுவலகம் பூட்டிக் கிடக்கவே அருகிலுள்ள அவருடைய உறவினரின் மருத்துவமனையை தாக்கி சூறையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment