
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஸ்ரீநகர் உள்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு காஷ்மீரில் உள்ள பட்டான் என்ற இடத்தில் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் முகாமை சிலர் தீயிட்டுக் கொளுத்தினர்.
சம்பல் பகுதியில் உள்ள நய்ட்காட் என்ற இடத்தில் உள்ள ஜம்மு காஷ்மீர் ஆயுதப் படைப் பிரிவு முகாமை சூறையாடவும் முயற்சிகள் நடந்தன
இந்த சம்பவத்தின்போது எஸ்.பி. ஷேக் ஜூனைத் என்பவர் காயமடைந்தார். பல போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.
0 comments:
Post a Comment