போதை சாக்லேட் சப்ளை; இளைஞர் முதல் கிழவர் வரை சுவைத்து தின்று போதையில் திளைத்த அவலம் !


சென்னை: கஞ்சாவை அரைத்து , தேவையான இனிப்பு சேர்த்து, கவரும் விதமாக கலர் பொடி போட்டு , ரோட்டில் போடப்பட்ட சாக்லேட் தாள்களில் பொதிந்து, விற்பனைக்கு அனுப்பி வைத்து, என்ன சமையல் குறிப்பு சொல்வது போல் இருக்கிறதா ஆம் அப்படித்தான் அந்த அளவிற்கு போதையில் உரிய தரம் வருவதற்காக போதை சாக்லேட் என புதுமையாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சாக்லெட்டுகள் இளைஞர்கள் மற்றும், கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது என்பதுதான் அதிர்ச்சி தகவல்.

சமீப காலத்தில் போதை ஏற்றும் பழக்கம் அதிகரித்திருப்பதாகவே புள்ளியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பசப்பு வாழ்க்கைக்கு இளைஞர்களே இலக்கு. போதை தடுப்பு நாள் கடைபிடிக்ககப்டுவதையொட்டி தமிழகம் முழுவதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி போதை தடுப்பு காவல்படை ஐ.ஜி., அபாஸ்குமார் தலைமையில் போலீஸ் படை கொண்ட 7 தனிப்படை அமைக்கப்பட்டன. இந்த படையினர் நடத்திய சோதனையில் வேலூரை சேர்ந்த ஆனந்தன் என்பவன் கைது செய்யப்பட்டான். இவன் கொடுத்த வாக்குமூலத்தில் கஞ்சாவை சர்க்கரையுடன் அரைத்து சாக்லேட்டாக தயாரித்து விற்றதை ஒப்புக்கொண்டான். இவனிடம் இருந்து 10 ஆயிரம் போதை சாக்கலட்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாவும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக டி. ஐ.ஜி., ஆறுமுகம் நிருபர்களிடம் கூறுகையில்; போதை சாக்லேட்டுகள் குறித்து போலீசார் சென்னையில் சென்ட்ரல், எக்மோர் உள்ளிட்ட முக்கிய பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் போதை சாக்லெட்டுகள் பீடா மூலமாகவும், நேரிடையாகவும் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. ஒரு சாக்லேட் 100 முதல் 200 வரை விற்கப்பட்டுள்ளது. வேலூரை சேர்ந்த ஆனந்தன் என்பவன் மூல கர்த்தாவா இருந்துள்ளான். இவனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளோம். இவனுடன் முருகேசன் என்பவனும் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

இளைஞர்கள் , மாணவர்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது. இந்த போதை சாக்லேட் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும். இன்னும் தமிழகம் முழுவதும் சிறப்பு கண்காணிப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற தகவல் தெரிந்தால் போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு யாரும் தகவல் கொடுக்கலாம்.

பெயர்கள் ரகசியம் காக்கப்படும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 044- 22341518 . போலி மாத்திரை, போலிச்சாமியார், போலி மார்க்ஷீட் பட்டியலில் போலி சாக்லேட்டும் சேர்ந்துள்ளது என்பது தான் பெரும் கவலை.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: